என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரவிசங்கர் பிரசாத்"
பாட்னா தொகுதியில் பாஜக சார்பில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் பாஜக சார்பில் ஏற்கனவே வெற்றி பெற்ற சத்ருகன் சின்காவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
நவடா எம்பி கிரிராஜ் இந்த முறை பெகுசராய் தொகுதியில் போட்டியிடுகிறார். பாடலிபுத்திரத்தில் ராம்கிரிபால் யாதவ், அர்ராஹ் தொகுதியில் ஆர்.கே.சிங், புக்சார் தொகுதியில் அஸ்வனி சவுபே, கிழக்கு சம்பரன் தொகுதியில் ராதா மோகன் சிங், சரன் தொகுதியில் ராஜீவ் பிரதாப் ரூடி போட்டியிடுகின்றனர்.
லோக் ஜனசக்தி கட்சியின் சந்தன் குமார் நவடா தொகுதியிலும், சிரக் பஸ்வான் ஜமுய் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். #NDACandidates #Bihar #RaviShankarPrasad
இந்திய கிரிக்கெட் அணி வீரர் கவுதம் காம்பீர், தொடக்க வீரராக களம் இறங்கிய அவர் 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கோப்பையையும் வென்று கொடுத்தார்.
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேர்ந்ததாகவும், பாஜகவில் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்ததால் பெருமைப்படுவதாகவும் காம்பீர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் காம்பீர் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவின் அடுத்த வேட்பாளர் பட்டியலில் காம்பீர் பெயர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #GautamGambhir #GambhirJoinsBJP #GambhirInBJP
மதுரை:
மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாதிகளின் தாக்குதல் காட்டு மிராண்டிதனமானது. வீரர்களின் தியாகம் போற்றப்பட வேண்டிய ஒன்று. பயங்கரவாதிகளை தூண்டிவிடுவதன் மூலம் பாகிஸ்தான் உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு தக்கபதிலடி கொடுக்கப்படும். பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பா.ஜனதா கட்சி தலைவர்களின் நிகழ்ச்சிகள் இன்று ஒருநாள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.
தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முத்ரா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 17 கோடி பேருக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 7.5 லட்சம் பேருக்கு கடன் கொடுக்கப்பட்டு உள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்தில் இந்தியாவில் 10 கோடி கழிவறைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் 52 லட்சம் கழிவறைகள் தமிழகத்தில் கட்டப்பட்டுள்ளன.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜனதா கட்சி இடம் பெறும் அணி வெற்றி கூட்டணியாக அமையும். அந்த வகையில் வலுவாக கூட்டணியை அமைப்போம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது விரைவில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #RavishankarPrasad
மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்துதான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றது என்று லண்டனில் இருந்து இணையவழியில் அமெரிக்க வாழ் இந்திய மின்னணு தொழில் நுட்ப வல்லுனர் சையது சுஜா என்பவர் பேட்டி அளித்துள்ளார்.
இதற்கு பாரதீய ஜனதா கட்சி பதில் அளித்துள்ளது.
அந்த கட்சியின் மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த விவகாரத்தில் புகார் கூறிய நபரின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆஷிஸ் ராய் தலைமையிலான இந்திய பத்திரிகையாளர் சங்கம் ஆகும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவான பாட்டை அவர் பாடி உள்ளார். அவர் காங்கிரஸ் பத்திரிகையான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கும் எழுதுகிறார். சமூக வலைத்தளங்களில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்கிறார். லண்டனில் ராகுல் காந்தியின் பொது நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ததும் அவர்தான். எனவே இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் கமிஷன் மீது களங்கம் ஏற்படுத்துவதற்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் நடந்த சதிதான் அந்த பத்திரிகையாளர் சந்திப்பு.
இவ்வாறு அவர் கூறினார். #EVMHackathon #RaviShankar #Congress
மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், சுவாசப் பிரச்சினை காரணமாக நுரையீரல் சிகிச்சைக்காக கடந்த திங்கட்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிறப்பு பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து நேற்று அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், ரவி சங்கர் பிரசாத்தின் உடல்நிலை தேறியதையடுத்து, இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
முன்னதாக இன்று காலை பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் ராம் லால், காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறின் காரணமாக நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Ravishankarprasad #AIIMS
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் அகில பாரதீய வழக்கறிஞர்கள் கவுன்சிலின் 15-வது தேசிய மாநாட்டை மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
அயோத்தி ராமஜென்மபூமி பிரச்சினையை உடனடியாக தீர்த்துவைப்பதற்காக இதனை விரைவு கோர்ட்டு போல விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று தனிப்பட்ட முறையில் சுப்ரீம் கோர்ட்டுக்கு எனது வேண்டுகோளை விடுக்கிறேன். சபரிமலை கோவில் வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்கும்போது, ராமஜென்மபூமி பிரச்சினை மட்டும் ஏன் கடந்த 70 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது.
நாம் ஏன் பாபரை வணங்க வேண்டும். அரசியல்சாசனத்தில் ராமர், கிருஷ்ணர் ஏன் அக்பர் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பாபர் பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் நாட்டில் நாம் இதுபோன்ற பிரச்சினைகளை பேசினால் ஒரு வித்தியாசமான சர்ச்சை உருவாகிறது.
எதிர்காலத்தில் நீதிபதிகளை நியமிப்பதற்காக அகில இந்திய நீதி சேவைகள் அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும். வழக்கறிஞர்கள் கவுன்சில் உறுப்பினர்கள் ஏழைகள் மற்றும் தேவையுள்ள மக்கள் தொடர்பான வழக்கு களை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உறுதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமஜென்மபூமி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 14 மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடத்த 3 நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #RaviShankarPrasad #Ayodhya
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் நேற்று கூறினார்.
இதற்கு பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பலரும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபகாலமாக மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பேசி வருகிறார். இந்தியாவில் ஒரு பிரதமரை மிக, மிக மோசமாக விமர்சிப்பது வரலாற்றிலேயே இதுவே முதல் தடவையாகும். தரம் தாழ்ந்து விட்ட ராகுலிடம் இருந்து பக்குவமான நிலையை எதிர்பார்க்க முடியாது.
பிரதமர் மோடியை தூங்க விடமாட்டேன் என்று இப்போது ராகுல் சொல்கிறார். இதற்கு முன்பு 60 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் என்னென்ன நடந்தது என்பது தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை.
60 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் எத்தனை, எத்தனை ஊழல்கள் நடந்தன. தொடர்ச்சியாக நடந்த ஊழல்களால் மக்கள்தான் தூங்க முடியாமல் தவித்தனர். இது ராகுலுக்கு தெரியுமா?
தொடர் ஊழல் பற்றி தெரியாவிட்டால் காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் கேட்டு அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.
ரபேல் போர் விமானம் வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்து விட்டதாக ராகுல் அடிக்கடி சொல்கிறார். ஒப்பந்தம் கை மாறியதால்தான் அவர் இப்படி பேசி வருகிறார் என்று நினைக்கிறேன்.
இதுபற்றி பாராளுமன்றத்தில் நேருக்கு நேர் விவாதம் நடத்துவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் எங்களிடம் நேரில் பேசும் தைரியம் ராகுலுக்கு இல்லை.
இதனால் ராகுல் விவாதிக்க வராமல் ஓடி ஒளிகிறார். கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லி நழுவுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #Congress #RahulGandhi #PMModi
சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், மிஜோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஓ.பி.ராவத் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த தேர்தல்களில் பா.ஜ.க. வரலாறு காணாத வெற்றிபெற்று சத்தீஸ்கர், ம.பி., ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரவிசங்கர் பிரசாத், இந்த தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலிமையான கூட்டணியை அமைக்க தவறிய காங்கிரஸ் தலைமையை குற்றம்சாட்டியுள்ளார்.
வலிமையான கூட்டணிக்கான உறவுகளை உருவாக்கவும், பாதுகாக்கவும் தவறிவிட்ட காங்கிரஸ் கட்சியை ஒரு குடும்பத்தினருக்கான கட்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நல்லமுறையில் நடைபெற்றதாகவும், இந்த தேர்தலிலும் இம்மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க. வெற்றிபெற்று, மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #5statepolls #BJP # RaviShankarPrasad
முத்தலாக் முறைய தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய மந்திரிசபை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்ட மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர பிரசாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முத்தலாக் முறையை உலகில் உள்ள 22 நாடுகள் ஒழுங்குப்படுத்தி, திருத்தியுள்ளன. ஆனால், இந்த பாலின சமத்துவத்தை இந்தியாவில் உள்ளவர்கள் ஓட்டுவங்கி அரசியலுக்காக கடைபிடிக்க மறுக்கின்றனர். காங்கிரஸ் கட்சியின் மரியாதைக்குரிய பெண் தலைவராக இருந்த சோனியா காந்தி காட்டுமிராண்டித்தனமான, மனிதாபிமானமற்ற முத்தலாக் ஒழிப்புக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார்.
முத்தலாக் ஒழிப்பு மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற ஓட்டுவங்கி அரசியலுக்காகவே காங்கிரஸ் ஒத்துழைக்க மறுத்து விட்டது. சோனியா காந்தி, மாயாவதி, மம்த பானர்ஜி ஆகியோர் பாலின சமூகநீதிக்காக இந்த மசோதாவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுகொள்கின்றேன்.
தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டத்தில் பாதிக்கப்பட்ட மனைவியோ, அவரது மிக நெருங்கிய உறவினர்களோ காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பாதிக்கப்பட்ட அல்லது விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கு அவரது குழந்தையை வளர்க்கும் உரிமையும், உள்ளூர் மாஜிஸ்திரேட்டின் உத்தரவுப்படி தனக்கும் தனது குழந்தைக்கும் ஜீவனாம்சம் பெறும் உரிமையையும் இந்த அவசர சட்டம் பெற்றுதரும். #TripleTalaqBill #TripleTalaq #votebankpolitics #RaviShankarPrasad
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்